கோவில்

மனதை கடவுளிடம் நல் விஷயத்தில்  லயிக்க செய்யும் இடமே  ஆலயம் ஆகும். 

 

நமக்கு அனைத்திலும் முன்னேற்றம்,மகிழ்ச்சி நிறைவு அகியவற்றிற்க்கு தேவையான சக்தியையும்,ஊக்கத்தையும், ஆற்றலையும் அளிக்கும் இடமே  ஆலயம்.

 

பண்டைய வேத கலாச்சாரத்தில் நாம் மேன்மையடைய ஐந்து அடுக்குகளாக (ஐந்து நிலைகள்) வழிபாடுகள் / ப்ரார்த்தனைகள்/வாழ்க்கை  முறைகள் அமைந்திருக்கின்றன. 

 

முதல் நிலை : ஒன்று நம்பிக்கையின் பால் தெய்வங்களுக்கு செய்யும் சாமான்யமான தீமிதி முதலிய  சடங்குகள், சாலையோர தெய்வ, மர, புற்று, கோவில் முதலிய வழிபாடுகள்.


இரண்டாம்  நிலை :  மந்திர பூர்வமாக ஆகம சாஸ்த்திர நியமங்களுக்கு உட்பட்டு ஸ்தாபிக்கப்படும் ஆலயங்களில் வழிபாடு. ஸ்தல புராணங்களில் கூறிய கதை /சம்பவம், மஹிமையோடு கூடிய  ப்ராசின ஆலயங்களில் வழிபடுவது, தீர்த்த யாத்திரை /ஆலய  புண்ணிய கேக்ஷத்திர யாத்திரைகள் செய்வது  

 

மூன்றாம்  நிலை :  மந்திர சாஸ்திரங்களில் கூறிய மந்திரங்களை ஜெமிப்பது,பூஜைகள்  ஹோமங்கள் செய்வது,விரதங்கள் /உபவாஸங்கள் இருப்பது.   

உயர்ந்த நிலை :  பலனை எதிர்பாராமல் கடமையை  செய்து அனைவரும் போற்றும் வண்ணம் உயர்ந்த பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்து பொருள்களற்ற மானஸ பூஜை  செய்து அம்ருத நிலையை அளிக்கும் தத்துவ விசாரங்கள் செய்வது.


மிகஉயர்ந்த நிலை : தத்துவ விசாரணையின் பயனாக "அஹம் ப்ரஹ மாஸ்மி"  என்கிற சஹஜ மோக்ஷ / மஹா சமாதி / ஞான  நிலையை அடைந்து உலகின் உன்னதத்திற்கு வழி கட்டுவது.

 

 இந்த ஐந்து நிலைகளில் நாகரிகமான, ஆன்மிக பற்றுள்ளவர்களில் பெரும் பகுதி மக்களுக்கு இரண்டு  மற்றும் மூன்றாம்  நிலை (முறையில்) இயற்கையாக அவர்களுக்கு பொருந்துவதும், எற்றத்தைத் தருவதும், உயர்வை தருவதும் ஆகும்.

 

இந்த இரு நிலைகளை உள்ளடக்கிய ஆகம, சில்ப,மந்திர சாஸ்திர ப்ரமாண பூர்வமாக "வேத ஸ்ரீ வித்யா மஹா மேரு மந்திராலயம்" கோவிலை உலகில் பல பாகங்களில் நிர்மானம் செய்திட சங்கல்பித்துள்ளோம் ஆகம சாஸ்திரங்களின் சாரமாகவும்,சூக்சம   சில்ப சாஸ்திரத்தில் (ரகசியங்களின் வெளிப்பாடாகவும்) மந்திர சாஸ்திரத்தின் உச்சமாகவும், மந்திர  சாஸ்திரத்தின் லயஸ்தானமாகவும் இந்த ஆலையம் அமையும். 

 

சாதாரணமான  ஆலய வழிபாட்டின் பலனை விட 1000 மடங்கு அதிக பலனும் ப்ராசின ஆலயங்களின் வழிபாடு பலனை விட 100 மடங்கு அதிக பலனை கொடுக்க வல்லது இந்த ஆலயம் 

 

பக்தர்களே நேரடியாக தெய்வங்களை உணர (செய்ய) வைக்கக் கூடியதாகவும் 15 அடுக்கு தளங்களை (FLOOR) கொண்டதாகவும் நூற்றுக்கணக்கான தேய்வ  சிலா மூர்த்திகளால் ப்ரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் இந்த ஆலயம் அமைக்கப்படும். நமது ஆத்ம சக்தியை அதிகரிக்க வல்லதாகவும், வியாபார நோக்கமற்றதாகவும்  இருக்கும் இந்த ஆலயம்.  

 

நமது அனைத்து விதமான தேவைகள்,ஆசைகள்,ப்ராத்தனைகள் இவைகளை கடவுளிடம் தெரிவிக்க அவைகள் வகைப்படுத்தப்பட்டு, அது அதற்குரிய தெய்வங்களின் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும்   அதற்குரிய மந்திரங்கள், உபாசனை, வழிபாடு முறைகள் பக்தர்களுக்கு போதிக்கப்பட்டு உபாசகளின் சமைனைகள் (பக்தர்களின் ப்ரார்த்னைகள்) மிக விரைவாக  நிறைவேறும் ஆலயமாக அமையும் இந்த ஆலயம்.

 

வேத கலாசாரத்தை பரப்புவதாகவும், விவேக பக்தியை வளர்ப்பதாகவும், பக்தர்களின் கோரிக்கையை மிக விரைவாக நிறைவேற்ற வல்லதாகவும் அமையும் இந்த ஆலயம்.  

 

இந்த ஆலயத்தின் கிளை அமைப்புகள்,வேத வகுப்பு, யோகா வகுப்பு, தியான வகுப்பு, வைதிக பூஜை சேவைகள், பாரம்பரிய உணவு ப்ரசாத சேவைகள்,பாரம்பரிய இந்திய மருத்துவ சேவைகள்,அறநெறி கல்வி சேவை முதலிய சேவைகளை வழங்கும்.  

 

இத்தகையை  சீறிய சிறப்பு வாய்ந்த ஆலயத்தை முதலில் USA TEXAS OR USA CALIFORNIA BAY AREA வில் நிர்மானிக்க விரும்புகிறோம். இதில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் உதவ விரும்புபவர்கள்  USA GREEN CARD HOLDERS,OR USA CITIZEN எங்களை தொடர்பு கொள்ளவும்.

 P.R ராஜா வாத்யார்   - +91 9444055444