ஸ்ரீஓம்.ஆர்க்

rrவேத ஶ்ருதி மஹா புண்யே ப்ரஹ்மண்யே ஜாதவேத3ஸீ| த்வம் ப்ரஹ்ம- வித்யா வித்3யானாம் மஹா நித்ராச தேஹினாம்| ஸாவித்ரீ வேத3 மாதாச ததா2 வேதா3ந்த உச்யதே| ஸ்துதாஸி த்வம் மஹா தே3வி விசுத்தேனாந்த ராத்மனா| ஜயோ ப4வதுமே நித்யம் த்வத் ப்ரஸாதாத்3 ரணாஜிரே ||

 

ஸ்ரீஓம்.ஆர்க் எனும் இந்த இணையதளம் ப்ரும்ம ஸ்ரீ P.R.ராஜா வாத்யார் முதலிய வேத பண்டித நிபுணர்களால் தொடங்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இந்த இணையதளம் முலம் கீழ்காணும் பிரிவுகளில் சேவைகள் வழங்கப்படுகிறது

 

1. சணாதனமான இந்துமத வேத கலாச்சாரத்தை பரப்புதல், வேத கலாச்சாரத்தின் நன்மைகளை எடுத்துரைத்து, ஆன்மீக மக்களை பின்பற்றச்செய்தல்.

 

2. வேதம், வேதாந்தம், ஸ்தோத்திரங்கள் மற்றும் வழிபாடு முறைகள் ஆகியவற்றை கற்றுக்கொடுத்து மக்களுக்கு ஆன்மீக வளர்ச்சியை (Spritual development) ஏற்படுத்துதல்.

 

3.வேதகலாச்சாரத்தில் உள்ள மந்திர சாஸ்திரத்தின் மூலமான பொது மக்களின் ஏனைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல்.

 

4. தேவி உபாசனையான ஸ்ரீவித்ய பூஜா வழிபாடு முறைகளை மக்களுக்கு போதித்து, பின்பற்ற செய்து சமூகத்தில் மகிழ்ச்சியையும் சாந்தியையும் மலரச்செய்தல்.

 

5. உணவு அளித்தல்.

 

6. ஸமஸ்காரா வேத வைதிக சேவைகள், அதாவது சென்னையில் பொது மக்களுக்கு தேவையான பூஜை, ஹோமம் செய்வதற்கு தேவையான வாத்யார்கள் கல்யாணம் முதலிய ஸம்ஸ்காரங்கள் செய்வதற்கு தேவையான சாஸ்திரிகள், பிராம்மணரல்லாதவர்களுக்கு தேவையான புரோஹிதர்கள் ஏற்பாடு முதலிய பல சேவைகளை வழங்குதல் மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்களும் ஏற்பாடு செய்தல்.

 

7. மேற்கு மாம்பலம் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீவேதவித்யா ஆஸ்ரமத்தில் வருடாந்திர ஹோம ஸ்ராத்தம், மாசிகம் முதலியவைகளுக்கு பதிவு எடுத்துகொள்ளுதல்.

 

8. சென்னை மேற்கு மாம்பலத்தில்  ஸ்ரீ வேதவித்யா ஆஸ்ரமம் எனும் பெயரில் இயங்கும் யஜூர் வேத பாடசாலை பற்றிய விபரங்கள் தெரிவிப்பது, வேத தர்மத்தில் பங்கெடுக்க விரும்புபவர்களின் நன்கொடைகளை ஏற்று வேத தர்மத்தில் சேர்ப்பது.

 

9.அமெரிக்கா(USA) நாட்டில் உள்ள கலிபோர்னியா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் வேத வைதீக சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் பதிவு எடுத்துக்கொண்டு சேவையளித்தல்.

 

10. பூஜை ஹோமம் போன்ற நிகழ்சிகளில் மடி சமையல் வேண்டுபவர்களுக்கு சுவையான சுத்தமான மடி சமையல் உணவு அளிப்பது .


ஸ்ரீஓம்.ஆர்க் ஸ்தாபகர் மற்றும் உறுப்பினர்கள்: