நமது குடும்பத்தில் பிறந்த குழந்தையின் முதல் பிறந்த நாள் அன்று ஆயுஷ்ய ஹோமம் செய்ய வேண்டும்.16 வயது வரை வருடந்தோரும் ஆயுஷ்ய ஹோமம் செய்யலாம். அப்படி செய்வதால் குழந்தைக்கு பாலாரிஷ்டக் தோஷம் இருந்தால் விலகி விடும்.குழந்தை ஆரோக்கியமாக வளரவும், வியாதிகள் வராமல் இருக்கவும், நீண்ட ஆயுள் வாழவும், பிரம்மா முதலிய தேவர்களின் ஆசி வேண்டியும் ஆயுஷ்ய ஹோமம் செய்ய வேண்டும். மேலும் மிருத்யுஞ்ய ஹோமமும் செய்யலாம்.நவகிரஹங்களின் பரிபூரண அனுக்கிரஹம் கிடைத்திட நவகிரஹ ஹோமமும் செய்யலாம்.கணபதி பூஜை செய்து சங்கல்ப்பம், மேற்கூறிய தெய்வங்களை ஆவாஹணம் செய்து கலச பூஜை செய்து 16 விதமான உபசார பூஜைகள் செய்து, அக்னி முகம் செய்து ஹோமம் செய்ய வேண்டும். குழந்தைக்கு பட்டு உடுத்தி சந்தனம், குங்குமம் இட்டு ஹோம பிரசாதத்தை மந்திர பூர்வமாக ஊட்ட வேண்டும். பிறகு ஆசீர்வாதம், குழந்தைக்கு கர்ண பூஷணம் (காது குத்துதல்) செய்வதாக இருந்தால் நல்ல நேரத்தில் குழந்தையை தாய் மாமன் மடியில் உட்கார வைத்து காது குத்தி ஆரத்தி எடுக்க வேண்டும்.