புது வீடு கட்டி க்ரஹப்ரவேசம் செய்வதற்கு புது வீட்டிற்கு கதவும், தளமும், வர்ண பூச்சும் முடித்து இருக்க வேண்டும். புது வீட்டில் தொடங்க இருக்கும் சகல விதமமான நற்செயல்களும் தடையின்றி நடைபெற கணபதி ஹோமமும் க்ரஹபீடைகள் அகல நன்மைகள் பெருக நவக்ரஹ ஹோமமும், வாஸ்து தோஷங்கள் விலக வாஸ்து ஹோமமும் நக்ஷத்ர தேவதைகளின் ப்ரீதிக்காக நக்ஷத்ர ஹோமமும் செய்ய வேண்டும். வீடு கட்டும் போது உயிரிழந்த சகல ஜீவ ராசிகளின் தோஷ, பாபங்கள் விலகவும் ப்ரார்த்திக்கப்படுகிறது. புதிய வீட்டில் லக்ஷ்மி கடாஷம் நிறைந்து இருக்க பசுவிலோ வீட்டு ப்ரதான வாசல் காலிலோ மஹா லக்ஷ்மியை ஆவாஹித்து பூஜை செய்ய வேண்டும், பால் காய்ச்சி நைவேத்யம் செய்து மந்திர பூர்வமாக பால் அருந்த வேண்டும். புது விட்டிற்குள் நுழையும் போது தண்ணிர் நிறை குடம், ஸ்வாமி படம், தீபம் மங்கள த்ரவ்ங்கள் மளிகை பொருட்கள் எடுத்து செல்ல வேண்டும் பூஜைக்கு பிறகு பூசணிக்காய் உடைத்து த்ருஷ்டிகழித்து ஹாரத்தி எடுக்க வேண்டும். புது வீட்டில் இரவு தங்க வேண்டும். புதிய வீட்டில் தெய்வ அனுக்ரஹத்தால் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிரம்பி இருக்கட்டும்.