நமது உடலில் உள்ள வியாதிகளை குறைத்து ஆரோக்கியத்தை கொடுத்து, மரணத்தை அழிக்கும் அனுகிரஹத்தை செய்பவர் ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜய ஸ்வாமி என்கிற சிவபிரான். மேற்படி பலனை அடைய ஸ்ரீ ம்ருத்யுஞ்ஜய தேவனை வழிபடுவதற்கு முன்று வீதமான ம்ருத்யுஞ்ஜய ஹோமங்கள் இருக்கின்றன.
ரிக் வேதத்தில் உள்ள ம்ருத்யுசூக்தத்தினால் செய்வது ம்ருத்யுலாங்கூல ம்ருத்யுஞ்ஜய ஹோமம். யஜுர் வேதத்தில் உள்ள ம்ருத்யுசூக்தத்தினால் செய்வது அமிர்த ம்ருத்யுஞ்ஜய ஹோமம். த்ர்யம்பக மஹா மந்திரத்தினால் செய்யப்படுவது ம்ருத்யுஞ்ஜய ஹோமம் எனப்படும். ஆலம் மொக்கு, சீந்திக் கொடி, சர்க்கரை பொங்கல், நெய், அருகம்புல், பால், நெல், எள்ளு, தேன் முதலிய த்ரவியங்களால் செய்யலாம். தேவைகேற்ப த்ரவியங்கள் மாறுபடும். மேற்படி சிறப்பு வாய்ந்த ஹோமத்தை செய்வதால் ஸ்ரீ அமிர்த ம்ருத்யுஞ்ஜய ஸ்வாமி உங்களுக்கு அனுகிரஹிக்கட்டும்.