நாம் தொடங்கும் அனைத்து விதமான செயல்களும் தடையில்லாமல் மற்றும் வெற்றிகரமாக அமைவதற்கு ஸ்ரீ மஹா கணபதி பெருமானை வழிபடும் பூஜை தான் ஸ்ரீ மஹா கணபதி ஹோமம் ஆகும். ஸ்ரீ மஹா கணபதி மூல மந்திரம் கொண்டு அஷ்ட த்ரவியம், கொழுக்கட்டை, அப்பம் முதலிய த்ரவியங்களை கொண்டு செய்யப்படுகிறது. இதே மூல மந்திரத்தை கொண்டு 1008 ஆஹுதீகள் செய்வது மஹா கணபதி ஹோமம் எனப்படும்.
இந்த ஹோமம் செய்வதால் வியாபாரத்தடை, செல்வ வருகைத்தடை, வெற்றி தடை, குடும்ப தடை, சுபிக்ஷ தடை முதலிய அனைத்து விதமான தடைகளும் விலகி ஓடும். மஹா கணபதி உபாசனை போன்று பல விதமான நமது தேவைகளை அனுக்ரகிக்கக் கூடிய பல விதமான கணபதி தெய்வ வழிபாட்டு முறைகளும் நமது சாஸ்திரத்தில் இருக்கிறது. வேறு சில ஹோமங்களுடன் ஸ்ரீ மஹா கணபதி ஹோமமும் சேர்த்து செய்வது உண்டு. மேற்படி சிறப்பு வாய்ந்த ஹோமத்தை செய்வதால் உங்களுக்கு ஸ்ரீ மஹா கணபதி அனுகிரஹிக்கட்டும்.