ஸ்ரீராம தீர்த்தம்.காம்

பித்ருக்களை வருடந்தோறும் புஜிப்பது நமது குடும்ப நன்மைக்கே.

 


சாஸ்திரங்கள் இறந்த நமது தாய், தந்தை முதலிய உறவினர்களுக்கு 12 நாட்கள் செய்யும் சடங்குகளை அந்திம சம்ஸ்காரம், அபரகிரியை, காரியம் என்று சொல்லப்படுகிறது. 

 

அபரக்ரியையே புத் என்கிற நரகத்திலிருந்து நமது பெற்றோர்களை விடுவிக்கிறது. 

 

அபரக்ரியை  இறந்த நமது பெற்றோர் ஜீவனை, ப்ரேத சரீரத்திலிருந்து விடுவித்து பித்ரு லோகத்தை அடைவிக்கிறது.

 

அபரக்ரியைகளில் நாம் தானங்களினால் ஜீவனுக்கு சௌகரியமான பித்ரு  லோக ப்ராயணமும்(பயணம்) அபரிதமான   புண்யமும் கிடைக்கிறது.

 

அபரக்ரியைகளை ஒழுங்காக செய்யாவிட்டால் நமது குடும்பத்திற்கு / சந்ததிகளுக்கு பித்ரு சாபம் ஏற்படுகிறது.

 

பித்ரு சாபத்தினால் தரித்ரம், உழைத்தும் பலன் /புகழ் கிடைக்காமை,அகால மரணம் (சிறிய வயதில் மரணம்)வசதியிருந்தும் அனுபவிக்க முடியாத துரதிஷ்டம்,எதிர்ப்புகள் /அதிகமான எதிரிகள் /அங்கஹீனமான குழந்தை பிறப்பு,குழந்தையின்மை ஆகிய தீயபலன்கள் ஏற்படுகிறது.     

 

அபரக்ரியைகள் ஜீவனை பூமியிலிருந்து தெற்கு  திசையில் 86000 யோஜனை தூரத்திலுள்ள பித்ரு லோகத்திற்கு அழைத்து செல்கிறது. 

 

அபரக்ரியைகள் ஜீவனை ப்ரயாண  வழியில் உள்ள கடுங்குளிர் பெருங்காற்றில் வரும் சிரமம், வழியில் உள்ள துஷ்ட சந்துக்களால் வரும் சிரமம், பத்ர நதி,வைகரணீ நதி,க்ரெஞ்ச,க்ருரபுர நகரம்,துக்கதம்,பக்குவபலம்,சீதாப்ர நகரம்,வைவஸ்த பட்டணம் முதலியவற்றை தாண்டி பித்ரு லோகத்தை அடைவக்கிறது

 

அபரக்ரியைகளில் செய்ய கூடிய தானங்களின் பலன்கள் ஆயிரம் க்ரஹணம், பத்தாயிரம்  வியாதீபாதம்,லஷம் அமாவசை மூணரை கோடி துவாதசி இவைகளுக்கு சமமான புண்யங்களை கொடுக்கும். 

 

சாதாரண அபரக்ரியைகளில் தானங்களை செய்வதால் கிடைக்கும் புண்ணியம் போல் 100 மடங்கு புண்யம் தந்தைக்கு கர்மா செய்யும் போது கிடைக்கிறது. தாய்க்கு கர்மா செய்யும் போது  1000 மடங்கு புண்யம் கிடைக்கிறது.  

 

இத்தகையை உயர்ந்த பலன்களை அனைவரும் அடைய வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்திற்காக ப்ரும்மஸ்ரீ P.R.ராஜாவாத்தியார் அவர்களால் பொதுமக்கள் பித்ரு கார்யங்கள், அபரக்கிரியைகள் சிரத்தையாக செய்வதற்கு உதவியாக 2010ஆம் ஆண்டு ஸ்ரீராமதீர்த்தம் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

காஞ்சி காமகோடி பீடாதிபதிஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வந்து துவக்கி வைத்தார்கள்.பரனூர்மஹாத்மா ஸ்ரீக்ருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள் அவர்கள் வந்து ஆசிர்வதித்தார்கள்.ஸ்ரீ லோகக்ஷேமா ட்ரஸ்ட் ஆல் கட்டப்பட்டு ஸ்ரீராமதீர்த்தம் ட்ரஸ்ட் ஆல் நிர்வகிக்கப்படுகிறது.

 

2012ஆம் ஆண்டு ஸ்ரீராமதீர்த்தம் பின்புறம் உள்ள இடத்தில் நமது பித்ருக்களின் சிரத்தங்களை சிறப்பாக நடத்துவதர்க்கு "ஸ்ரீராமதீர்த்தம் பித்ரு ஸ்ராத்த மையம்" ஆரம்பித்து நடந்து வருகிறது.

 

ஸ்ரீராமதீர்த்தம்   ஸ்தாபகர்