க்ரஹப்ரவேசம்

Generic placeholder image
சமூக வலைதளங்களில் பகிர :

க்ர்ஹான்  ப4த்ரான் ஸுமணஸ : ப்ரபத்3யே

அவீ ரக்4னீ  வீர வத: ஸுவீரான்| இராம்  வஹதோ 

க்4ருத முக்ஷ மாணா: தேஷ்வஹம் சுமணாஸ்ஸம் விசாமி||  

இந்த வீடு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. இவ்வீட்டில் வசிப்பவர்கள் நல்மனது உடையவர்கள் ஆக இருக்கட்டும். இவ்வீடு குழந்தை செல்வம் நிரம்பியதாக இருக்கட்டும். ஆபத்தற்றதாக இருக்கட்டும். இவ்வீட்டிற்கு நல் ரக்ஷகர்கள் கிடைக்கட்டும். இவ்வீட்டில் உணவு நிறைவும், உண்ட உணவுகள் சுலபமாக ஜீரணிக்கட்டும் இவ்வீடு நன்மைகளையும் மகிழ்ச்சியையும் பெருக்கட்டும், இவ்வளவு சிறந்த இவ் வீட்டில் நல் மனதுடன் நான் பிரவேசிக்கிறேன். (உட் புகுகிறேன்)

பிரிவு வகைசாஸ்த்ரிகள்நேரம்தட்சிணை(ரூ)
D 1 1:30 6,000.00
C 2 2:30 8,000.00
B 4 3:00 13,000.00
A 6 3:30 18,000.00
Grand version (customized) details Click here
புது வீடு கட்டி க்ரஹப்ரவேசம் செய்வதற்கு புது வீட்டிற்கு கதவும், தளமும், வர்ண பூச்சும் முடித்து இருக்க வேண்டும். புது வீட்டில் தொடங்க இருக்கும் சகல விதமமான நற்செயல்களும் தடையின்றி நடைபெற கணபதி ஹோமமும் க்ரஹபீடைகள் அகல நன்மைகள் பெருக நவக்ரஹ ஹோமமும், வாஸ்து தோஷங்கள் விலக வாஸ்து ஹோமமும் நக்ஷத்ர தேவதைகளின் ப்ரீதிக்காக நக்ஷத்ர ஹோமமும் செய்ய வேண்டும். வீடு கட்டும் போது உயிரிழந்த சகல ஜீவ ராசிகளின் தோஷ, பாபங்கள் விலகவும் ப்ரார்த்திக்கப்படுகிறது. புதிய வீட்டில் லக்ஷ்மி கடாஷம் நிறைந்து இருக்க பசுவிலோ வீட்டு ப்ரதான வாசல் காலிலோ மஹா லக்ஷ்மியை ஆவாஹித்து பூஜை செய்ய வேண்டும், பால் காய்ச்சி நைவேத்யம் செய்து மந்திர பூர்வமாக பால் அருந்த வேண்டும். புது விட்டிற்குள் நுழையும் போது தண்ணிர் நிறை குடம், ஸ்வாமி படம், தீபம் மங்கள த்ரவ்ங்கள் மளிகை பொருட்கள் எடுத்து செல்ல வேண்டும் பூஜைக்கு பிறகு பூசணிக்காய் உடைத்து த்ருஷ்டிகழித்து ஹாரத்தி எடுக்க வேண்டும். புது வீட்டில் இரவு தங்க வேண்டும். புதிய வீட்டில் தெய்வ அனுக்ரஹத்தால் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிரம்பி இருக்கட்டும்.


வெற்றிலை பாக்கு பழங்கள்,புஷ்பம், மாலை, வாழை இலை, மாவிலைக் கொத்து, ஹோமகுண்டம், தீபம்,சுவாமிபடம், முதலியவைகளை தாங்களே ஏற்பாடு செய்ய வேண்டும்.