Seemantham (Bramins)

Generic placeholder image
Share on social networking sites :

தா4தா த3தா3து  தா3ஸுஷே வஸூனி ப்ரஜா 

காமாய மீடு4ஷே  து3ரோனே | தஸ்மை தே3வா!!

 அம்ருத ஸ்ஸம்வ்யயந்தாம் விவ்வேதே3வாஸோ

 அதி3திஸ்ஸஜோஷா:|

ப்ரும்ம தேவா!! எனது ஹோமங்களை ஏற்றுக் கொண்டு மக்கள் செல்வங்களை கொடுப்பாயாக! மரணமற்ற தேவர்களே, விஸ்வே தேவர்களே அன்பு நிறைந்த குழந்தைகளை கொடுங்கள் அதிதி தேவியே புத்ர சம்பத்தை எனக்கு தானம் செய்வாயாக !.

Section TypeBramin்TimeDakshina(Rs)
D 2 2:00 6000
C 3 2:00 9000
B 4 2:00 12000
A 5 2:30 15000
Grand Version (customized)details Click here




பெண் கர்ப்பமான ஆறாவது மாதம் அல்லது எட்டாவது மாதம் (6 அல்லது 8 வது) மாதம் சீமந்தம் செய்ய வேண்டும். அதற்கு முன்பு 3 அல்லது 5-ம் மாதம் பும்ஸூவனம் செய்ய வேண்டும். யஜுர் வேதத்திற்கு 6 மஹரிஷிகள் 6 விதமான ப்ரயோகங்களை வழங்கியுள்ளனர். அவைகள் ஆபஸ்தம்பம், போதயணம், காத்யாயணம், சத்யாஷாடம், பாரத்வாஜம் etc..., முதலியவைகள். ரிக் வேதிகளுக்கு ஆவ்வலாயணம் என்றும் சாமவேதிகளுக்கு த்ராஹ்யாணம் என்றும் வழங்கியுள்ளனர். இவைகள் தர்ம சாஸ்திரத்தில் க்ருஹ்ய சூத்ரம் எனும் க்ரந்தத்தில் அமைந்துள்ளன. பும்ஸூவனம் தனியாக செய்ய முடியாவிடில் சீமந்தத்துடன் சேர்த்து செய்யலாம். 

சீமந்தம் ஒரு முறை தான் செய்ய முடியும்.  பும்ஸூவனம் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். கணபதி பூஜை, சங்கல்பம், கலச பூஜை, உதகசாந்தி ஜபம் இவைகள் செய்து சீமந்த பெண்மனிக்கு உதகசாந்தி ஜப நீரால் அபிஷேகம் செய்து, ரக்ஷாபந்தணம்(காப்பு) செய்ய வேண்டும். அக்னி சந்தானம், ஒளபாசனம்,  பும்ஸூவன ஹோமம் மூக்கு பிழிதல்,சீமந்த ஹோமம்  செய்து அட்சதை ஆசிர்வாதம் ஹாரத்தி ஆகியவைகளை செய்ய வேண்டும். 

இந்த ஸம்ஸ்காரத்தை செய்வதால் சீமந்த பெண்மனிக்கு உடல் ஆரோக்கியமும் தீர்காயுசும் சுகப் பிரசவமும், ஆரோக்கியம் புத்தி நிறைந்த குழந்தை பிறப்பும் ஏற்படுகிறது. மேற்படி ஸம்ஸ்காரத்தினால் ப்ரும்மாதி தேவர்கள் அனுகிரஹிக்கட்டும்.