Samskara

ஸமஸ்காரா வேத வைதிக சேவைகள், சென்னையில் பொது மக்களுக்கு தேவையான பூஜை, ஹோமம் செய்வதற்கு தேவையான வாத்யார்கள் கல்யாணம் முதலிய ஸம்ஸ்காரங்கள் செய்வதற்கு தேவையான சாஸ்திரிகள், பிராம்மணரல்லாதவர்களுக்கு தேவையான புரோஹிதர்கள் மற்றும் பல... சேவைகளை வழங்குதல் மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்களும் ஏற்பாடு செய்தல்.

 

மேற்கு மாம்பலம் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீவேதவித்யா  ஆஸ்ரமத்தில்  வருடாந்திர ஹோம ஸ்ராத்தம், மாசிகம் முதலியவைகளுக்கு பதிவு எடுத்துகொள்ளுதல்.

 

1. வேத மந்திரங்களைக் கொண்டு ஜீவனை சுத்திகரிக்க கூடிய செயல் சமஸ்காரம் எனப்படும்.
2.ஒவ்வொரு மனிதனுக்கும் லௌகிக, ஆன்மீக மேன்மை அடைவதற்கு 40 விதமான சமஸ்காரங்கள் விதிக்கப்பட்டுள்ளது.
3. மிகச்சிறந்த பல மகரிஷிகளால் ஏற்ப்படுத்தப்பட்டு உள்ள அவைகளை சமத்ரம் என்று அழைக்கப்படுகிறது.
4. கல்யாணம் முதலிய பூர்வ சமஸ்காரங்கள் க்ரஹ்ய சூத்ரம் எனப்படும். க்ரந்தங்களில் க்ரியைகளை ஏன், எங்கு, எப்பொழுது, யார், எப்படி செய்ய வேண்டும் என்று விபரமாக வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
5. இறந்த பின் செய்ய வேண்டிய க்ரந்தகளில் சமஸ்காரங்கள் கபர்த்தி சளரிகை என்னும் க்ரந்தகளில் ஏன், எங்கு, எப்பொழுது, யார், எப்படி செய்ய வேண்டும் என்று வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
6. பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள பாபங்கள் விலகவும், சித்த சுத்தி ஏற்பட, மனஸ்ஸந்தனுஷ்டி ஏற்படவும் சமஸ்காரங்கள் அவசியம் செய்ய வேண்டும்.
7. பூரணமான சரீர வளர்ச்சி, ரசாயன, தாது வளர்ச்சி, நற்சிந்தனை, நல்மனது, சுக பிரசவம் முதலிய நன்மைகள் ஏற்பட சீமந்தம் முதலிய சமஸ்காரங்கள் செய்ய வேண்டும்.
8. நல்பேர்களிடம் சேருதல், நல்புத்தி வளர்ச்சி, தீயசக்திகளிடமிருந்து பாதுகாப்பு, தைவங்களின் ரஷணம், மேதாவித்தணம், அறிவு, ஆற்றல் முதலிய நன்மைகள் பெற உபநயனம் முதலிய சமஸ்காரங்கள் செய்ய வேண்டும்.
9. நமது சரீர அனு பூரண நல்நிலையை அடையவும், அந்த அனுக்களின் நன்மைகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் தகுதியும், குணமும் ஏற்பட அஷ்டவ்ரதம் முதலிய சமஸ்காரங்கள் செய்ய வேண்டும்.
10. வெவ்வேறு இடத்தில் சூழ்நிலையில் பிறந்த இருவரின் மனமும், சிந்தனையும் ஒன்றாக இணையவும் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் வாழ்வு அமையவும், சிரமங்கள் சங்கடங்களற்ற சுகமான வாழ்வு அமைய தைவங்கள் அனைத்து நன்மைகளையும் 16 விதமான செல்வங்களையும் அனுக்ரஹிக்க விவாஹம் முதலிய சமஸ்காரங்கள் செய்ய வேண்டும்.
நம் வாழ்வில் உள்ள சிரமங்கள், குறைகள், தரித்ரங்கள், ரோகங்கள், பீடைகள், வியாதிகள் அகன்று, சுகமான, சௌகரியமான வாழ்வு பெற ஆரோக்யம், சந்தோஷம், வெற்றி, தன, தாண்யாதி செல்வங்கள் முதலிய ஐஸ்வர்யங்கள் வாழ்நாள் முழுவதும் நிறைந்து நிலைத்து இருக்க கணபதி ஹோமம் முதலிய காம்ய(கர்மா) சம்ஸ்காரங்கள் செய்ய வேண்டும்.